தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ‘ஆக்சன் கிங் அர்ஜுன்’ என்று ரசிகர்களால் கொண்டப்படுகிறார். இவர் தற்பொழுது வெளியான நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் கூட ஹரால்டு தாஸாக நடித்து அசத்தியிருந்தார். நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘சொல்லி விடவா’ என்ற படத்திலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் இன்றி தற்பொழுது உள்ளார். சினிமாவில் மார்க்கேட் இல்லாததால் குடும்பத்தொழிலை கவனித்து வரும் ஐஸ்வர்யா ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலம் குறையாமல் இருக்க சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்தும் வருகிறார். நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நிச்சயதார்த்தத்தை கலர்புல்லாக நடத்திக் கொடுத்த ஈவென்ட் மேனேஜர் ஒரு பேட்டியில், பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார்.

மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம், வைரம் கலந்த மோதிரமும் அதன் மத்தியில் குட்டியா ஒரு மாணிக்க கல்லும் பொறிக்கப்பட்டு இருந்தது. இருவரின் ஆடைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்தும் லைட் பிங்கில் அடிக்காத கலராக அசத்தலாக உருவாக்கப்பட்டு இருந்தது. நிச்சயதார்தத்துக்கு வந்த அனைவருக்கும் தங்கத்தட்டில் பல மாநிலங்களை சேர்ந்த சிறப்பான உணவு வகைகளை செய்து விருந்தினர்களுக்கு கொடுத்து அசத்தினார்கள் என கூறியுள்ளார்.
View this post on Instagram
