பிஸ்னஸ் செய்ய உங்கள் பணம் தேவையில்லை… நான் ஒரு முன்மாதிரி ஆள் இல்ல, முட்டாள்- ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பகிர்ந்த தொழில் நுனுக்கங்கள்!

By vinoth on ஜூலை 9, 2024

Spread the love

பலதுறைகளில் முதலீடு செய்து இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவராக இருப்பவர் சிவசங்கரன். இவரின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக ஏர்செல் நிறுவனம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு நிறுவனத்தோடு இணைக்கப்பட்டது.

ஏர்செல் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் ஆலிவ் ஆயில் தோட்டம் உள்ளிட்ட பல தொழில்களை செய்துவரும் சிவசங்கரன், சென்னையின் வண்ணாரப்பேட்டையில் பிறந்து அங்கேயே பள்ளிக் கல்வி முடித்து பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடிததவர். மெக்கானிக்கல் துறையில் சில தொழில்களை செய்த அவர் அவற்றை வெற்றிகரமாக நடத்திக்கொண்டே தொலைதொடர்பு துறையில் கால்பதித்து வெற்றிகரமான தொழில் முனைவோராக வந்தார்.

   

இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும்,  இப்போது தன்னுடைய மற்ற தொழில்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு அளித்த நேர்காணலில் தொழிலில் தன்னுடைய வெற்றி தோல்விகளுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

   

அதில் “நாம் ஒரு தொழில் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பணமே தேவையில்லை.  உங்கள் தொழில் ஐடியாவைக் கேட்டு மற்றவர்கள் தாங்களாகவே பணத்தைக் கொண்டுவந்து போடவேண்டும். அவர்களுக்கு புரியும் அளவுக்கு நீங்கள் உங்கள் ஐடியாவை விளக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

 

#image_title

நான் தொழில் என்பதை பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டேன். அதனால்தான் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல முதலீடு செய்தேன்.

நான் ஒரு முன்மாதிரியான ஆள் இல்லை. நான் எதையுமே சரியாக ஃபோகஸ் செய்யவில்லை. ஃபோகஸ் என்றா சாப்பிடும் போது அதை மட்டும் நினைக்கவேண்டும். உறங்கும்போது அதை மட்டும் நினைக்கவேண்டும். சாப்பிடும் போது உறக்கத்தையும், உறங்கும்ப்போது தூக்கத்தையும் பற்றி நினைக்கக் கூடாது. அப்படி செய்தா அது டிஃபோகஸ்.

எல்லோரும் நான் ஏர்செல் நிறுவனத்தை விற்றதைப் பற்றி வருத்தமாக பேசினார்கள். ஆனால் அந்நிறுவனம் என் காலுக்கு பத்தாத செருப்பு போல கஷ்டமாக இருந்தது. அதைக் கழட்டிவைத்த பின்னர்தான் இன்னும் இன்பமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.