ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்… Food Poison தான் காரணமா .? பெரும் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 24, 2025

Spread the love

லண்டனில் இருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-130 இல், ஐந்து பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது. இதனால் போயிங் 777 விமானம் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு அங்கு மருத்துவக் குழுக்கள் உடனடி சிகிச்சை அளித்துள்ளார்கள்.

அவர்களின் உடல்நிலை சீரான பிறகு அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், “எங்கள் விமான ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், மேலும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. food poison காரணமாக இது நடந்திருக்கலாம்” என்ற கூறியுள்ளது.  11 பேர் வரை பாதிக்கப்பட்டதாகக் கூறினாலும், ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏழு பேர் எனத் தெரிகிறது.