இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை இவானா. அதன் பிறகு பிரதீப் ரங்கநாதனோடு இவர் இணைந்து நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனையடுத்துஇஇதனையடுத்து தற்போது தற்போது குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு பட வாய்ப்புகள் வராதது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், தான் பல படங்களில் ஆடிஷனுக்கு சென்றபோது உயரம் குறைவாக இருப்பதன் காரணமாக நிராகரிப்பை சந்தித்ததாக கூறியுள்ளார். அதாவது 5 அடி உயரம் மட்டுமே இருப்பதால் என்னை வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஹீரோ உயரமாக இருக்கிறார். நீங்க குள்ளமாக இருக்கிறீங்க. நீங்கள் செட்டாக மாட்டீர்கள் என்று நேரடியாகவே சொல்வதாக கூறியுள்ளார்.
