BREAKING: 242 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்.. சற்றுமுன் இந்தியாவில் நிகழ்ந்த சோகம்..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இன்று லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட 10 நிமிடத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் அந்த பகுதியே பற்றி எரிந்து புகை மண்டலமாக காணப்படுகிறது.  விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.