தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்களின் ஒருவராக மாறியுள்ளார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக குபேரா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் இருபதாம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இட்லி கடை உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தனுஷின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றுதான் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படம் அவருடைய 25வது படமாகும். இளைஞர்கள் அனைவரும் கொண்டாடப்படக்கூடிய படமாக இந்த திரைப்படம் இருந்த அந்த இரு பிளாக்பஸ்டர் வெற்றியை தனுஷுக்கு தேடித் தந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இப்படியான நிலையில் அமலாபால் சமீபத்திய பேட்டியில் தனுஷ் குறித்து பேசி உள்ளார். அதில், வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தேன்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-24T160736.395.jpg)
அப்போ நடிக்கும்போது அனைவரும் கேரவனில் சேர்ந்து ஒன்றாக தான் சாப்பிடுவோம். தனுஷ் பார்க்க தான் ஒல்லியாக இருக்கின்றார். அவர் நிறையவே சாப்பிடுவார். அவர் முழுக்க முழுக்க சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுவார். அதே சமயம் முட்டை மற்றும் அசைவத்தில் விரும்பி சாப்பிடுவார். அதனைப் போலவே சாப்பிடும் போது அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது. அதாவது அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். எனவே சாப்பிடும் போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி சாரீ நகைச்சுவை காமெடிகளை போட்டு விடுவார். அதைப் பார்த்துக் கொண்டே தான் சாப்பிடுவார் என்று அமலாபால் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
