தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெறும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தமுறை தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தவெகவுடன் கூட்டணி அமையாததால் அதிமுக விரக்தியில் இருப்பதாக பேசிய டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் பதிலளித்துள்ளார்.
அதில் , அரசியல் கட்சித் தலைவர்கள் ஜனவரியில் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள். அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைப்பதற்கான களப்பணி நடந்து வருகிறது. கூட்டணிக்கு தவெக வரும் என்பதே அதிமுக முக்கியத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.
