தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சமீபகாலமாகப் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. மறுபுறம், தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு ஊடகங்களை எப்படிக் கையாள வேண்டும் எனப் பாடம் எடுப்பது போல, “ஊடகங்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் ஆட்சியாளர்களை மக்களுடன் இணைக்கும் பாலம்” என்ற வாசகத்துடன் கூடிய AI புகைப்படம் ஒன்றை ஜெயக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ஊடகங்களை மதித்து அவர்களின் கேள்விகளை முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும், கோபமோ அகங்காரமோ இல்லாமல் அமைதியாகத் தரவுகளுடன் பேச வேண்டும் என்றும் விஜய்க்கு அட்வைஸ் செய்திருந்தார். மேலும், உணர்வுப்பூர்வமாகப் பேசாமல் தரவுகளுடன் பேசினால் மட்டுமே நம்பிக்கை வளரும் என்றும், பல்வேறு விவகாரங்களில் திசைதிருப்பப்படாமல் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் குறியாக இருந்து நம்பிக்கையுடன் பேட்டியை முடிக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் நின்று பாடம் எடுக்க, அதனை முதலமைச்சர் விஜய் அமர்ந்து கவனிப்பது போன்ற அந்தப் படம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயக்குமாரின் இந்த அட்வைஸுக்குத் தவெக தரப்பு மிகக் காரசாரமான ஒரு பதிலடியைக் கொடுத்துள்ளது. ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு எதிராகக் களம் கண்டு வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் விஜய் தாமு, ஜெயக்குமாருக்குப் பாடம் எடுப்பது போன்ற மற்றொரு AI புகைப்படத்தை தவெகவினர் வெளியிட்டுள்ளனர். அதில் “டெபாசிட் என்பது பணம் அல்ல, அது மக்களின் நம்பிக்கை” என்று குறிப்பிட்டு, தேர்தலில் வெல்வது எப்படி மற்றும் டெபாசிட்டை இழக்காமல் இருப்பது எப்படி என்று ஜெயக்குமாருக்குப் பாடம் எடுக்கும் வகையில் அந்தப் பதிவு சித்தரிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிடும் முன் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், ஈகோ இல்லாமல் விவாதங்களை விடுத்து மனங்களை வெல்ல வேண்டும், சத்தத்தை விட திட்டங்களே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அதில் தவெகவினர் அனல் பறக்கும் வரிகளைப் பதிவிட்டிருந்தனர்.
இந்த போஸ்டர் மற்றும் பதிலடிப் பதிவுகளைத் தொடர்ந்து, இணையத்தில் அதிமுக மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே தற்பொழுது கடுமையான வார்த்தை மோதல் வெடித்துள்ளது. ஒரு மூத்த அரசியல்வாதி சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளைக் கூட ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் புதிய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக, முன்னாள் அமைச்சரைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், கட்சி சார்பாகச் செயல்படும் ஊடகங்களுக்கு முதலமைச்சர் எதற்காகப் பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் தவெகவினர் சமூக வலைதளங்களில் காரசாரமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…