இபிஎஸ்ஸின் அடுத்த மூவ்… தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் களமிறங்கும் அதிமுக… அனல் பறக்கும் அரசியல் களம்…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்காக பல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. கேரளாவில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதற்காக முதல் கட்டமாக 28 வேட்பாளர்களையும் இபிஎஸ் அறிவித்துள்ளார்.