NDA கூட்டணியின் ‘அசல் பாஸ்’ யார்?… டெல்லியில் இருந்து வந்த ‘ஷாக்’ மெசேஜ்… மிரண்டு போன எடப்பாடி….!

Spread the love

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் தலைமை வகிப்பது என்ற மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஒரு கூட்டணியில் எந்தக் கட்சி தலைமையேற்கிறதோ, அந்தக் கட்சிதான் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைக்கும். ஆனால், தமிழகத்தில் அதிமுக தங்களைத்தான் கூட்டணியின் தலைமை என்று கூறி வரும் நிலையில், பாஜகவின் இந்தத் தன்னிச்சையான முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகளிலும், தொகுதிப் பங்கீடு விவகாரங்களிலும் பாஜக மேலிடப் பொறுப்பாளர்களே முன்னிலை வகித்து வருகின்றனர். பாமக, அமமுக போன்ற கட்சிகள் பாஜகவின் மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பிறகே கூட்டணியில் இணைந்தன. இதனால், பெயரளவில் மட்டுமே அதிமுக தலைமையில் கூட்டணி இயங்குகிறதா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி நடவடிக்கை தேசிய ஜனநாயக கூட்டணியின் ‘பாஸ்’ யார் என்ற கேள்வியை மீண்டும் வலுவாக்கியுள்ளது. இது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் நாட்களில் தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மல்லுக்கட்டு ஏற்படும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago