சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக கடுமையான சவால்களையும், உட்கட்சி நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று ஆற்காடு பகுதி அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரான சுகுமார் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புறக்கணிப்பு எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலியாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஏற்கனவே எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் உருவான அதிருப்தி அணி, தவெக உடனான அரசியல் சூழல்களுக்குப் பிறகு தற்காலிகமாக அமைதியடைந்தது. இருப்பினும், அவர்களின் பழைய கட்சிப் பதவிகளை மீண்டும் வழங்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரளவிலான பொறுப்புகளை மட்டுமே வழங்கியதால், முக்கிய நிர்வாகிகள் பலரும் தற்போதும் அதிருப்தியிலேயே உள்ளனர். தற்போதுள்ள 42 அதிமுக எம்எல்ஏ-க்களில் கணிசமானோர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதில் சுமார் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் தாவக்கூடும் என்றும் வெளியாகும் அரசியல் தகவல்கள் கட்சியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக மிக மோசமான அரசியல் சறுக்கலைச் சந்தித்து வரும் நிலையில், இபிஎஸ்-ஸின் பிடிவாத போக்கே இதற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இன்மை மற்றும் எம்எல்ஏ-க்களின் அதிருப்தி செயல்பாடுகளால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியிலும், ஆதங்கத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்களை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், கட்சியை வலுப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி அடுத்து என்ன அதிரடி நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் அமையும் என்பதால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…