அதிமுகவில் அடுத்த பரபரப்பு… உருவாகும் புதிய கூட்டணி… செம ஷாக்கில் இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் இபிஎஸ் மீது கட்சியை நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைைய வேண்டும் என கூறி இருந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் விவகாரத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் என்று கூறி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளார். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் புதிய கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். நேற்று இபிஎஸ் கூட்டணியை நம்பி அதிமுக இல்லை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

9 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

10 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

10 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

10 மணத்தியாலங்கள் ago