“EPS-க்கு விழுந்த பலத்த அடி”… இரவோடு இரவாக திமுகவில் கூண்டோடு இணைந்தனர்…. ஒரே நாளில் அதிமுகவில் இருந்து 150 பேர் அவுட்….!

By Nanthini on பங்குனி 19, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், ஆளும் தரப்பான திமுக தனது கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட மொத்தம் 150-க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வழக்கறிஞர் அணியிலிருந்து இத்தனை பேர் ஒரே நேரத்தில் ஆளுங்கட்சிக்குச் சென்றிருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.