திடீ ர் திருப்பம்… அதிமுகவில் மீண்டும் டி.டி.வி. தினகரன்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தஞ்சை மாவட்ட நிர்வாகி பத்ம குமரேசன் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

டி.டி.வி. தினகரனை கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என்று நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை எந்தவித ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டது தமிழக அரசியல் அரங்கில் உற்றுநோக்கத்தக்க ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.