மொத்தமாக சரியும் இபிஎஸ் கோட்டை… கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியம்… மகிழ்ச்சியில் துள்ளும் ஸ்டாலின்…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கையில் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் முன்னிலையில் ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சித் தொண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.