அதிமுகவுக்கு அடுத்த ஷாக்….. TVK-வில் இணையும் EX MLA ராஜா கிருஷ்ணன்…. செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்…. செம ஷாக்கில் எடப்பாடி..!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், அந்தியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா கிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், நடந்து முடிந்த 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்குப் தீவிரமாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் இந்த முக்கிய முடிவுக்குப் பின்னால் அதிமுகவின் உள்கட்சிப் பூசல்களும், நிலவிவரும் அதிருப்திகளுமே பிரதான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, ராஜா கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் விரைவில் தவெகவில் இணையவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது KAS முன்னிலையில் ராஜா கிருஷ்ணன் தவெகவில் இணைய இருப்பது, ஈரோடு மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் அரசியலில் தவெகவின் கரத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.