“பனையூர் பண்ணையார் அங்கிள்” கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க.. விஜய்யை வம்புக்கு இழுத்த அதிமுக.. எகிறும் அரசியல் அனல்..!!

By Soundarya on மாசி 13, 2026

Spread the love

அதிமுகவின் அதிகாரப்பூர்வ X தளம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சேலம் மேடைப் பேச்சை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளது. விஜய்யை “பனையூர் பண்ணையார் அங்கிள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக, அவரது “கொள்ளை அனுபவம்” குறித்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளது. “FDFS (முதல் நாள் முதல் காட்சி) சினிமா டிக்கெட்டுகள் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கொள்ளை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அக்கட்சி, சினிமா துறையில் விஜய்க்கு 30 ஆண்டுகால “கொள்ளை அனுபவம்” இருப்பதாகச் சாடியுள்ளது.

மேலும், விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது சவாலையும் ஏளனம் செய்யும் வகையில், “கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க அங்கிள்” என அதிமுக பதிவிட்டுள்ளது. சேலம் கூட்டத்தில் “அனுபவம் வாய்ந்தவர்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?” என விஜய் பேசியது, தற்போது அதிமுக மற்றும் தவெக இடையே ஒரு நேரடி ‘X’ தளப் போராக உருவெடுத்துள்ளது. விஜய்யின் அரசியல் நகர்வுகளை அதிமுக இவ்வளவு வெளிப்படையாகக் விமர்சிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.