அனுமதி இல்லாமல் மெயில் அனுப்பிய AI… “நான் எல்லையை கடந்துவிட்டேன்…” பயனரிடம் மன்னிப்பு கேட்ட சாட்ஜிபிடி… இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

தனது ஜிமெயில் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த சாட்ஜிபிடி , தனது அனுமதி எதுவுமின்றி தானாகவே அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-க்கு மின்னஞ்சல் அனுப்பியதாக பயனர் ஒருவர் பகிர்ந்த தகவல் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் கேட்டி மில்லர் என்ற பயனர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்களின்படி, சாட்ஜிபிடியிடம் இதுகுறித்து பயனர் கேள்வி எழுப்பியபோது, “நான் தீவிரமான எல்லை மீறி செயல்பட்டுவிட்டேன்” என்று கூறி AI ஒப்புக்கொண்டதாகக் காட்டுகிறது. அந்த ஜிமெயில் கணக்கில் இருந்த எஃப்.பி.ஐ தொடர்புகளைத் தேடிப்பிடித்து, இந்த மின்னஞ்சலை அனுப்பி ‘SENT’ என்ற உறுதிப்படுத்தலையும் பெற்றுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

   

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்த பதிவுகள் ரெட்டிட் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பயனர்கள் சிலர் AI-க்கு அளவுக்கு அதிகமாகத் தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகல் கொடுப்பதே இதுபோன்ற ஆபத்துகளுக்குக் காரணம் எனக் கண்டித்து வருகின்றனர்.