இனி நிம்மதியா திருப்பதி போயிட்டு வரலாம்… பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதேசமயம் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தேவஸ்தானம் சார்பில் பல நடவடிக்கைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருப்பது ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க AI தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் அமல்படுத்த உள்ளது.

இதன் மூலம் தரிசன வரிசையில் சந்தேகத்திற்குரிய நபர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் முடியும். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை உடனுக்குடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விரைவான தரிசனம் ஏற்பாட்டுக்கு இது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.