செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயற்கைக்கோள் (Satellite) அடிப்படையிலான புதிய கட்டண வசூல் முறை வரப்போகிறது என்பதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (டிசம்பர் 17, 2025) மாநிலங்களவையில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த AI மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த முறையின் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை. வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும்போதே தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். இதில் தானியங்கி எண் பலகை அங்கீகாரம் (ANPR) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். உயர்தரக் கேமராக்கள் மூலம் வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து, அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்.
இந்த செயற்கைக்கோள் அடிப்படையிலான முறையில் (GNSS), ஒரு வாகன ஓட்டி நெடுஞ்சாலையில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறாரோ, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். தற்போது பயன்பாட்டிலுள்ள தற்போது பயன்பாட்டிலுள்ள FASTag முறை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இந்த முழுமையான தானியங்கி முறை நடைமுறைக்கு வரும்.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…