குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் அருகே விபத்துக்குள்ளானது. கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய கோர விபத்தாக இந்த விமான விபத்து அமைந்துள்ளது. இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. தற்போது வெளியாக்கியுள்ள தகவலின் படி விமானத்தில் பயணித்த 242 பேருமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் இந்த விமான விபத்து ஏற்பட்டதால் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த விபத்தில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக குஜராத் போலீஸ் தரப்பில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
