அந்த ஒரு படத்துல நடிச்சதால என் கணவர் 10 நாள் என் பக்கத்துல வரவே இல்ல.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

ஓதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டில் அறிமுகமாகி அவர் நடித்த முதல் சில படங்கள் கமர்சியல் ரீதியாக அமைந்தது. அதில் டூயட்டுக்கு மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னுடைய ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ் நடிகை திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்த நிலையில் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது.

என்னுடைய வருங்கால கணவர் இவர் தான்?.. வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..! - Update News 360 | Tamil News Online

   

தொடர்ந்து மாமன்னன், சைரன் என சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட காலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு மதங்களின் முறைப்படி இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் உறுதியாக உள்ளார்.

   

Actress Keerthy Suresh And Her Husband Antony Thattil Age Difference | கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் வயது வித்தியாசம் அடேயப்பா இவ்வளவா Movies News in Tamil

 

இப்படியான நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், ஆண்டனி இடம் நான்தான் முதலில் காதலை சொன்னேன். எங்கள் காதலை சீக்ரெட் ஆக இத்தனை காலம் வைத்திருப்பதற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். நான் நடித்த படங்களில் மகாநடி,சாணி காகிதம் மற்றும் ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக சாணி காகிதம் போன்ற படங்களில் ஜானரை அவர் விரும்புவார். அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனது பக்கத்தில் கூட பத்து நாட்கள் அவர் வரவில்லை என்ற கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.