அட.. இவர்தான் பிரபல பாடகி ‘சின்னக்குயில்’ சித்ராவின் மறைந்த மகளா?… உங்களுக்கு தெரியுமா? அவருடைய பிறந்தநாள் தான் இன்று!….

அட.. இவர்தான் பிரபல பாடகி ‘சின்னக்குயில்’ சித்ராவின் மறைந்த மகளா?… உங்களுக்கு தெரியுமா? அவருடைய பிறந்தநாள் தான் இன்று!….

திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகியான கே எஸ் சித்ரா அவர்களின் மறைந்த மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மனதை வருடும் குரலுக்கு சொந்தக்காரரான பாடகி சித்ராவை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் ‘சின்னக்குயில் சித்ரா’ என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். இதுவரை ஆறு முறை தேசிய விருதையும் வாங்கியுள்ளார் பாடகி சித்ரா.

இவர் குரலில் வெளிவந்த கண்ணாளனே, மலர்கள் கேட்டேன், நான் போகிறேன் என பல எண்ணற்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அது மிகை ஆகாது. தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக விளங்கி வருகிறார். பாடகி சித்ரா அவர்கள் 1988ல் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2002ல் நந்தனா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஆர்ட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை. இக்குழந்தையின் மீது சித்ரா அவர்கள் அதிக அன்பு செலுத்தி வந்தார். தான் எங்கு சென்றாலும் கூடவே அழைத்து செல்வார். 2011ல் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது தனது மகளையும் அழைத்து சென்றார்.

அங்கு நந்தனா நீச்சல் குளத்தில் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துவிட்டார். யாரும் எதிர்பார்க்காத இந்த விபத்து தற்போது சித்ரா அவர்களின் மனதில் நீங்காத ஒன்றாக உள்ளது. இன்று அவர் தனது மறைந்த மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது மகளின் அழகான புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு….

Begam