இந்த போட்டோவில் இருப்பவர் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம்… யாருக்கு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….

இந்த போட்டோவில் இருப்பவர் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம்… யாருக்கு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கலந்து கொண்டுள்ள திருநங்கை சிவின் அவர்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது 68 நாட்களையும் கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் வெளியேற தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

 

ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகள் பெற்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டே வருகின்றனர். அந்த வகையில் இறுதியாக ஆயிஷா, ராம் என இருபோட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கு ஏடிகே, ஜனனி, மணிகண்டன் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஏடிகே குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து யார் இறுதியாக வெளியேறப் போகிறார் என்பது விரைவில் தெரிந்து விடும். பிக் பாஸ் டைட்டிலை கைப்பற்ற போவது யார் என்பதும் இன்னும் சற்று நாட்களில் நமக்கு தெரிந்து விடும்.

 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஸ்ட்ராங்கான போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் திருநங்கை ஷிவின். இவர் தனது தனித்துவமான விளையாட்டை பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார். இதற்கு முந்தைய சீசனில்  நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்து கொண்டார்.

அதேபோல இந்த சீசனில் திருநங்கை ஷிவின் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். தற்பொழுது சிவின் தனது  சிறு வயதில் அம்மா, அப்பா என குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam