நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். எத்தனை புதிய இளம் நடிகைகள் வந்தாலும் அவரது இடத்தை யாராலும் நெருங்க முடியவில்லை. கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களில் ஒரு படம் மெகா ஹிட்டாக, மற்ற இரு படங்கள் தோல்வியைத் தழுவின. இருப்பினும், த்ரிஷாவின் மார்க்கெட் குறையவில்லை. சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி, 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களின் அதிக வசூல் செய்த படங்களின் நாயகியாக த்ரிஷா இருப்பதால், ரசிகர்கள் அவரை தங்களின் ‘லக்கி சார்ம்’ என்று கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில், த்ரிஷாவின் நெருங்கிய தோழியான அர்ச்சனா அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், த்ரிஷா எப்போதும் தனது ‘லக்கி சார்ம்’ என்றும், தாங்கள் இருவரும் நீண்ட வருடங்களாக மிகச் சிறந்த தோழிகளாக இருந்து வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷா தமக்கு மிகவும் பிடித்தமான ஒரு நபர் என்றும், தங்களுக்குள் ஒரு பிரத்யேக தோழிகள் பட்டாளமே இருப்பதாகவும் அவர் அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
மேலும் பேசிய அர்ச்சனா, சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக த்ரிஷா உள்ளிட்ட தங்களது தோழிகள் குழுவோடு மொராக்கோ நாட்டிற்குச் சுற்றுலா சென்று வந்ததாகக் கூறியுள்ளார். பொதுவாகத் தாங்கள் ஏதேனும் சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், தனக்கு திடீரென வேலை வந்துவிடுவதன் காரணமாக அந்தத் திட்டத்தைக் கெடுப்பது பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தனது சூழ்நிலையை த்ரிஷா உள்ளிட்ட மற்ற தோழிகள் எப்போதும் மிகச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்றும் அர்ச்சனா தங்களின் நட்பின் ஆழம் குறித்து அந்தப் பேட்டியில் ஓபனாகப் பேசியுள்ளார்.
