கடந்தாண்டு வெளிவந்த ஜெயிலர் படத்தில் “காவலா” பாடலில் இடம்பெற்ற தமன்னா அவர்கள் தற்போது மார்க்க வளர்ந்ததால் அடுத்தடுத்து வரும் படங்களுக்கு அதிக சம்பளம் கேட்கிறாராம். தனியார் நிகழ்ச்சி இயக்குனராகவும், கதை ஆசிரியராகவும் இருந்து தற்போது 2018 ஆம் ஆண்டு “கோலமாவு கோகிலா” படம் மூலம் தமிழ் திரையுலைகள் வித்தியாசமான கதை அமைக்கும் இயக்குனர் என்று பெயர் பெற்று, தற்போது பிரபல இயக்குனராக வளம் வரும் “நெல்சன் திலீப் குமார்” அவர்கள்.
கோலமாவு கோகிலா வெற்றியை கண்டபின் பலரும் அவரை அணுக ஆரம்பித்தார்கள். அதன் பின்னதாக வெளிவந்த டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றி தந்தது, அதை தொடர்ந்து ரஜினி அவர்கள் நெல்சன் அழைத்து படம் இயக்க கேட்டுள்ளார், அதில் உருவானது தான் “ஜெயிலர்”. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கிசராப், சிவா ராஜ்குமார் போன்ற மற்ற மாநிலங்களின் சூப்பர் ஸ்டார் ஆனா இவர்களின் நடிப்பில் மாபெரும் வெற்றி கிடைத்தது.
இப்படத்தில் மற்ற நடிகரான யோகி பாபு, வசந்த் ரவி, சுனில், ரம்யா கிருஷ்ணன், ஜாபர் சாகிட், தமன்னா போன்ற நடிகர்களும் இடம் பெற்றிருந்தார்கள். இப்படத்தில் “தமன்னா” அவர்கள் “காவலா” என்ற பாடலுக்கு ஆடியிருப்பார், அது மட்டும் இன்றி சில சீன்களிலும் வந்திருப்பார். படம் வெற்றி அடைந்த 600 கோடி தொட்டிருந்தாலும் இப்படத்தில் காவலா சாங் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது, பாடலில் ஆடிய தமன்னாவுக்கு இப்படத்திற்குப் பின்பாக மீண்டும் மார்க்கெட் அளவு ஏரி உள்ளது.
அதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளரிடம் ஐந்து கோடி அளவில் சம்பளம் கேட்கிறாராம், ஜெய்லர் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஒரு கோடிக்கும் மேல் தரப்பட்டதாம், தற்போது அதனால் இனிவரும் படங்களுக்கு ஐந்து கோடிக்கு மேல் சம்பளம் தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று தயாரிப்பாளரிடம் கேட்டு வருகிறாராம். இதைப் பார்த்து ரசிகர்கள் இவரை கலாய்த்து விமர்சித்து வருகிறார்கள்.
