அவருக்காக உயிரையும் குடுக்க…’நா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப’.. விஜயகாந்த் உடலை பார்த்த பிறகு மனம் திறந்து பேசிய ரஜினி…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலமின்றி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தே மு தி க கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

   

இதைத்தொடர்ந்து இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன.ர் இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4:45 மணி அளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பலரும் அறியாத சில தகவல்களை உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது, ‘நான் இப்பதான் கன்னியாகுமரி ஷூட்டிங்ள இருந்து வந்தேன். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த் அவங்கள பத்தி பேசணும்னு சொன்னா எவ்வளவோ இருக்கு. முக்கியமா அவருடைய நட்பு .நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த் அவர்கள் தான். அவரோட வந்து ஒரு வாட்டி பழகிட்டா வாழ்க்கை பூரா அதை மறக்கவே முடியாது. அவரோட அன்புக்கு எல்லாருமே அடிமையாகிடுவாங்க. அதனால தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரவே கொடுக்க ரெடியா இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க. அவர் தனது  நண்பர்கள் மேலயும்  கோபப்படுவார்.

அரசியல்வாதிகள் மேலயும் கோபப்படுவார். ஏன் கூட இருக்க உங்க மேலயும் கோபப்படுவார். ஆனா யாருக்கும் அவர் மேல கோபம் வராது. ஏன்னு சொன்னா அந்த கோபத்துக்கு பின்னால ஒரு நியாயமான காரணம் இருக்கும். சுயநலமிருக்காது. அன்பு இருக்கும். அவர் ஒரு தைரியத்திற்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர். அவரை பற்றி சொல்வதற்கு நிறைய நினைவுகள் இருக்கு  எனக்கு உடம்பு ரொம்ப சரியில்லாமல் ராமச்சந்திரா மெடிக்கல் ஹாஸ்பிடல் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது, நிறைய பேர் மீடியா, மக்கள் எல்லாரும் வந்து ரொம்ப தொந்தரவாக இருந்தது .

கண்ட்ரோல் பண்ண முடியல. அப்ப விஜய்காந்த் அங்கு வந்த 5 நிமிஷத்துல அது என்ன பண்ணாரோ தெரியாது. எல்லாரையும் கிளியர் பண்ணிட்டாரு.  வீட்ல வந்து என்னோட ரூம் பக்கத்திலேயே ரூம் போடுங்க யாரு வராங்க நான் பார்த்துக்கிறேன். அப்படின்னு சொன்னாரு. மறக்க முடியாது.  கடைசி காலத்துல இப்ப அவரை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. கேப்டன் வந்து அவருக்கு ரொம்ப பொருத்தமான பேரு.  வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நின்றவர் யார்? விஜயகாந்த் அவர்கள் தான். வாழ்க விஜயகாந்த் நாமம்” என்று கூறி தனது உரையை கலக்கத்துடன் முடித்துள்ளார். இதோ அந்த வீடியோ…