Categories: சினிமா

லியோ, ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த வருடம் 500 கோடி வசூலில் சேர்ந்த அடுத்த படம்… தூள் கிளப்பிய பிரமாண்ட நாயகன்…

Spread the love

‘கே ஜி எஃப்’ என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்து அதன் இரண்டு பாகங்களையும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கியவர் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்பொழுது பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சலார்.  ‘ கே ஜி எஃப்’ படத்தை தயாரித்த ஓம் பாலி பிலிம்ஸ் நிறுவனம் தான் இத்திரைப்படத்தையும் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.  மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆனது. டிசம்பர் 22 ஆம்  தேதி ரிலீஸ் ஆன இத்திரைப்படம் முதல் நாளிலேயே 175 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்தது.

சலார் திரைப்படத்துக்கு போட்டியாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள டன்கி திரைப்படமும் ரிலீஸானது. ஆனால் சலார் திரைப்படம் எதிர்பாராத வசூல் சாதனையை தற்பொழுது புரிந்து வருகிறது.  இந்நிலையில் இந்நிலையில் 4 நாட்களைக் கடந்த இத்திரைப்படத்தின் வசூல்  450 கோடியை கலந்து 500 கோடியை எட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இத்திரைப்படம் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 400 கோடியை கடந்து சாதனை செய்தது. இதனை முறியடித்து 4  நாட்களில் 450 கோடியை கடந்து 500 கோடியை எட்டி,  ராஜ மவுலியின் பாகுபலிக்கு பின் 500 கோடி கிளப்பில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சலார் திரைப்படத்தின் மூலம் ஒரு மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ்.

Begam

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago