உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில், டெல்லியைச் சேர்ந்த 27 வயதான ஐடி பெண் ஊழியர் பி. ராதா காயத்ரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் பணிபுரிந்து வந்த காயத்ரிக்கும், புனேவில் பணிபுரியும் சௌம்ய ஸ்ரீசரண் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. கணவனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக முசோரிக்கு சுற்றுலா வந்த இந்த தம்பதியினர், ஜூன் 15 அன்று இரவு முசோரியில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேவில் தங்கியுள்ளனர்.
அன்று இரவு இருவரும் விடிய விடிய மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை கணவர் சௌம்ய ஸ்ரீசரண் எழுந்து பார்த்தபோது, ராதா காயத்ரி சுயநினைவின்றி மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதித்தபோது, அறையில் இரத்தக் கறைகள், காலி மது பாட்டில்கள் மற்றும் கணவர் பயன்படுத்திய பாலியல் ஊக்க மருந்துகளின் காலி கவர்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லாததால், அவரது உடற்கூறாய்வு வீடியோ பதிவுடன் செய்யப்பட்டு, உடலின் முக்கிய உறுப்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெண்ணின் தந்தை தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நியாயமான விசாரணை கோரியுள்ளார். மதுவின் தாக்கம், உட்கொண்ட மாத்திரைகளின் பக்கவிளைவு அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…