21 வருடங்களுக்கு பிறகு ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி-கமல்… வெளியான வீடியோ… உற்சாகத்தில் ரசிகர்கள்…

By Begam on நவம்பர் 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கமலஹாசன் மற்றும் நடிகர் ரஜினி இருவரும் வலம் வந்து கொண்டுள்ளனர். நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

   

‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாந்த் ஸ்டூடியோவில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இவரைப் போலவே நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

 

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘தலைவர் 170’  திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினி திரைப்படத்தின் சூட்டிங்கும் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களும் தற்போது சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  

21ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம்  தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இப்புகைப்படங்களை முதலில் பார்த்த ரசிகர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் பின்னர் தான் புரிந்தது.தனித்தனி படத்தில் நடிக்கும் இருவரும் சந்தித்தபோது எடுத்துக் கொண்டபுகைப்படம் என்று. தற்பொழுது இப்புகைப்படத்தினை ரஜினி, கமல் ரசிகர்கள் உற்சாகமாக வைரலாக்கி வருகின்றனர்.