பிரபலமே இல்லாத நபரை மகளுக்கு மணமுடித்த நடிகை ராதா.. யார் இந்த ரோஹித் மேனன்..? 500 கோடிக்கு அதிபதியா..?

By admin on கார்த்திகை 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 1980, 1990களில் கலக்கிய நடிப்பு சகோதரிகள் என்றால், அது இருவர்தான். ஒருவர் அக்கா அம்பிகா, மற்றொருவர் தங்கை ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், முரளி, சிவக்குமார், மோகன் என அந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் டூயட் பாடியவர்கள். இப்போது டிவி சேனல்கள் நடத்தும் டான்ஸ் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் இருவரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ராதாவின் மகள் கார்த்திகா கோ, அன்னக்கொடியும் கொடிவீரனும் போன்ற படங்களில் நடித்திருந்தார். அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா போல பெரிய அளவில் சினிமாவில் கார்த்திகா புகழ் பெறாத நிலையில், அவருக்கு சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

 Actress Radha

   

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல 80கள் ஹீரோக்கள், இந்த திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்தினர். இந்த திருமண விழாவில், மகளுக்கு 500 சவரன் நகைகள் உள்பட தங்கம், வெள்ளி சீதன பொருட்கள் என பிரமாண்டமாக இந்த விழா நடந்திருக்கிறது. மாப்பிள்ளை ரோஹித், பெரிய தொழிலதிபர் என்றும், 500 கோடிகளுக்கு மேல் சொத்துள்ளவர் என்றும் கூறப்படுகிறது.

   

 Actress Radha

 

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் அம்பிகா, ராதா இருவரும் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில், நட்சத்திர ஓட்டல்கள் மட்டும் 5 கட்டியுள்ளனர். அதுதவிர திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்தமாக மில் உள்ளது. அம்பிகா, ராதா ஆகியோரது அம்மா கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் பெரிய பதவியில் இருந்தவர். தன் மகள்களை அவரே விருப்பப்பட்டு, நடிகைகளாக்கினார்.

 Actress Radha

சென்னையில் ராதா, அம்பிகா தெரு என பல வீடுகள் அவர்களுக்கு சொந்தமாக உள்ளது. சென்னை போரூர் ரோட்டில் 25 ஏக்கரில் அவர்களுக்கு சொந்தமாக ஸ்டுடியோவும் உள்ளது. இப்படி மிக வசதியான ராதா, தனது செல்வாக்கு வசதிக்கு ஏற்ப மிகப்பெரிய இடத்தில், தொழிலதிபர் ரோகித்தை திருமணம் செய்து வைத்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.