பாகிஸ்தானுடன் எல்லையில் போர் நடந்து வரும் நிலையில் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியுள்ளது. பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் ஆப்கனின் கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் என்ற 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயிற்சி முடிந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றபோது அவர்கள் இந்த தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை பாகிஸ்தானின் கோழைத்தனம் என குறிப்பிட்ட ஆப்கன் கிரிக்கெட் வாரியம், இந்த துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நவம்பர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்பதிலிருந்து விலக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
