பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களை ‘ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது’ என்று அவர் கூறினார்.
X இல் பகிரப்பட்ட ஒரு இதயப்பூர்வமான பதிவில், ரஷீத் , “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு சோகம் என்று பதிவிட்டுள்ளார்.
நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் திட்டமிடப்பட்டிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான டி20 முத்தரப்புத் தொடரில் இருந்து விலகுவதாக அக்டோபர் 18 சனிக்கிழமை ஏசிபி அறிவித்தது. விமானத் தாக்குதலில் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய செய்திகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
