தேநீர் குடிக்கச் சென்ற இடத்தில் ரத்த வெள்ளம்…… நடுரோட்டில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. விழுப்புரத்தில் பட்டப்பகலில் அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

விழுப்புரத்தில் நிதி நிலுவை தொடர்பான தகராறில், அ.தி.மு.க. வார்டு செயலாளரை போதை ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகரப் பகுதியான பாப்பான்குளத்தைச் சேர்ந்த ஷேக் பாபு மற்றும் அ.தி.மு.க. வார்டு செயலாளரான ஷாஜகான் ஆகியோருக்கு இடையே நீண்டநாட்களாக பணப் பரிமாற்றம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஷாஜகான் விழுப்புரம் காட்பாடி மேம்பாலம் அருகே உள்ள தேநீரகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு போதை ஆசாமியான ஷேக் பாபு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த ஷேக் பாபு தான் வைத்திருந்த ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷாஜகானின் தலை, கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

   

இதில் பலத்த காயமடைந்த ஷாஜகான் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். தாக்குதலைத் தொடர்ந்து ஷேக் பாபு அங்கிருந்து தனது ஆட்டோவில் தப்பிச் சென்று வடக்கு தெருவில் உள்ள தனது வீட்டிற்கு மறைந்து கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

   

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஷாஜகானை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விரைந்து செயல்பட்டு தலைமறைவாக இருந்த ஷேக் பாபுவைக் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.