அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் ஓய்ந்தபாடில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பல்வேறு அணிகளாகச் சிதறுண்டு கிடக்கும் அதிமுக, அண்மையத் தேர்தல்களில் அடைந்த சரிவுகளால் மேலும் பலவீனமடைந்துள்ளது. குறிப்பாக, கட்சியின் முக்கியத் தளபதிகளாக இருந்த பலர் எடப்பாடி பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அதிருப்தியடைந்து, அடுத்தடுத்து மாற்று முகாம்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் கட்சியின் சீனியர் தலைவர்களான எஸ்.பி. வேலுமணியும், சி.வி. சண்முகமும் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வென்றுவிடலாம் என கணக்கு போட்டு வருகிறார். ஆனால், எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இருவரையும் கட்சியை விட்டு நீக்கினால், அவர்கள் எளிதாக தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்பதால் எடப்பாடி தரப்பு அமைதி காத்து வந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்த அதிருப்தி கூட்டணி, எடப்பாடிக்குத் தெரியாமல் கட்சிக்குள் ஒரு ரகசிய ‘ஆபரேஷனை’ வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்துள்ளது.
ஏற்கனவே அதிமுக மாவட்ட செயலாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோரிடம் சி.வி. சண்முகம் தரப்பு கையெழுத்து வாங்கியிருந்த நிலையில், உஷாரான எடப்பாடி சில மாவட்ட செயலாளர்களை மாற்றியமைத்தார். இதனை எதிர்கொள்ளும் விதமாக, தற்போது மாவட்ட செயலாளர்களைத் தாண்டி, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை வேலுமணியும் சண்முகமும் ரகசியமாகத் தொடர்பு கொண்டு பெரும் திரளானோரிடம் கையெழுத்து வேட்டையை நடத்தியுள்ளனர். விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, பிரிந்து சென்ற ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற இந்த அதிருப்தி குழு திட்டமிட்டுள்ளது.
மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த அதிரடி நகர்வு, எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகள் சிலர் மூலம் தற்போது லீக்காகி அம்பலமாகியுள்ளது. “யாரும் இல்லாமல் வென்றுவிடலாம்” என்ற நம்பிக்கையில் இருந்த எடப்பாடி தரப்புக்கு, கட்சியின் அடித்தளமாக விளங்கும் பொதுக்குழு உறுப்பினர்களே தனக்கு எதிராகத் திரும்பியிருப்பது பேரிடியாக இறங்கியுள்ளது. இந்த மெசேஜ் லீக்கானதால் அதிமுக தலைமை தற்போது கடுமையான பதற்றத்தில் ஆழ்ந்துள்ளதோடு, இந்த உள்கட்சிப் புரட்சியை எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக் கொண்டுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…