தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் தாக்கம் அதிமுகவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. கட்சியின் 54 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழப்பது இது இரண்டாவது முறை என்பதோடு, அக்கட்சியின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த தொடர் தோல்விகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இதுமட்டுமன்றி, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவளித்தது, 4 எம்எல்ஏக்களின் ராஜினாமா, மற்றும் எஸ்பி வேலுமணி, தங்கமணி தலைமையில் புதிய அணி உருவானது போன்ற அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
கட்சியின் முக்கிய தூண்களாக விளங்கிய எஸ்பி வேலுமணியும், தங்கமணியும் தங்கள் செயல்களுக்கு மன்னிப்பு கோரிய போதிலும், அவர்கள் வகித்த பதவிகளை மீண்டும் வழங்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ‘மணி டீம்’ தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயன்றதாகவும், அங்கிருந்து சாதகமான பதில் வராததால் தற்போது திமுகவிற்கு தாவ தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபடுகின்றன. இந்த தகவல் எம்ஜிஆர் மாளிகையின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ள நிலையில், எடப்பாடியின் தலைமைக்கு இது மேலும் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
இதே பாணியில், சென்னையைச் சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலரும் தவெக மற்றும் திமுகவில் இணைய திட்டமிட்டு வருவது தலைமைக்கு கூடுதல் தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, சென்னை மாவட்ட செயலாளர்களான ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை ரவி உள்ளிட்டோர் திமுகவில் இணைய காத்திருப்பதாகவும், அதேபோல் மற்றொரு மாவட்ட செயலாளரான பாலகங்கா தவெகவில் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வரும் ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைப்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் தவெகவில் இணையவிருப்பது கட்சியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இப்படி முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு விலகினால், அரசியல் களத்தில் தான் தனித்துவிடப்படுவோம் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமியை ஆட்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், கூடாரம் காலியாவதைத் தடுக்கும் நோக்கில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர அவசரமாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் மூலம் கட்சியின் உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது அதிருப்தி தலைவர்களின் வெளியேற்றம் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…