BREAKING: விஜய் கட்சியுடன் கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சு…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பாஜக ஆட்சியை தமிழகத்தில் எப்படியாவது நிலைநாட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

இதனிடையே தமிழகம் வெற்றிகழகம்  கட்சியுடன் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசியது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயுடன் இபிஎஸ் செல்போனில் 30 நிமிடம் பேசியுள்ளார். அப்போது திமுகவை எதிர்க்க கூட்டணியில் சேர விஜய்க்கு, EPS அழைப்பு விடுத்ததாகவும் பொங்கலுக்கு பிறகு தனது முடிவை கூறுவதாக விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பிள்ளையார் சுழி என இபிஎஸ் கூறியுள்ளார்.