என்னை உங்க மகனாக பாருங்க… புதிய வீடு கட்டித் தருவேன்… சத்தியம் செய்த ஆதவ் அர்ஜுனா..!!

By Soundarya on சித்திரை 19, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, அயனாவரம் பகுதியில் உள்ள பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், தமக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மக்களிடையே உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, தன்னை ஒரு வேட்பாளராகப் பார்க்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். மேலும், அந்தப் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் வீடுகளை அகற்றிவிட்டு, தனது சொந்த வீட்டைப் போலவே தரமான புதிய வீடுகளைக் கட்டித் தருவதாக மசூதி மீது சத்தியம் செய்து வாக்களித்தார். உணர்ச்சிப்பூர்வமான அவரது இந்த வாக்குறுதி, அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.