மங்களகரமான தினமான இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான இன்று அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தது.
அதன்படி ஜூலை 16 இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் உடன் கூடுதலாக நான்கு தட்கல் டோக்கன்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
