#image_title
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கின்றனர். பட அப்டேட், டெய்லி ஆக்டிவிடி என அனைத்தையும் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர். மக்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளை ஃபாலோ செய்வார்கள். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸை வைத்துள்ள நடிகைகள் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்
1.ராஷ்மிகா
43.3 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தியுடன் சுல்தான், விஜயுடன் இணைந்து வாரிசு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
2.சமந்தா
அதிக ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சமந்தா. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா உடல் நல ஆரோக்கியம், தியானம், போட்டோஷூட் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
3.காஜல் அகர்வால்
டாப் நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். 27.1 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் இன்ஸ்டாகிராமில் மூன்றாவது இடத்தில் உள்ளார்
4.பூஜா ஹெக்டே
தமிழில் ஜீவா உடன் முகமூடி, விஜய்யுடன் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் பூஜா ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 27 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் இன்ஸ்டாகிராம் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
5.சுருதிஹாசன்
உலக நாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இப்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுருதிஹாசன் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சுருதிஹாசன் 24.8 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்
6.தமன்னா
தமன்னா சமீபத்தில் சுந்தர் சி நடித்த அரண்மனை 4 படத்தில் நடித்தார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 25.6 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் பட்டியலில் தமன்னா ஆறாவது இடத்தில் உள்ளார்
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றின் பர்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த கோரப் படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.…
ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கோட்டைகளாகக் கருதப்படும் விருத்தாச்சலம் மற்றும் விருதுநகர் தொகுதிகளில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…