#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சினேகா ஏற்கனவே சினேகாலயா சில்க்ஸ் என்கின்ற பட்டுச் சேலை பிசினஸை தொடங்கியிருந்தார். இந்நிலையில் அடுத்த கட்டமாக அதனை லண்டனில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சினேகா. கடந்த 2000 ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து முன்னணி ஹீரோயினியாக வர தொடங்கினார்.
கமல், அஜித், விஜய், சிம்பு, விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.
அதைத் தொடர்ந்து இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து 2012 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஆதியந்தா, விஹானா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகிய சினேகா குழந்தை பெற்ற பின்னர் டிவி நிகழ்ச்சிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் நடிகை சினேகா புது பிசினஸ் ஒன்றை தொடங்கியிருந்தார். அதாவது சென்னையில் சினேகாலயா சில்க்ஸ் என்ற பட்டுச் சேலை பிசினஸை தொடங்கியிருந்த இவர் மிக பிரம்மாண்டமாக ஓப்பனிங் விழாவை வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது அவர் லண்டனுக்கு சென்று இருக்கின்றார். அங்கு விரைவில் தன்னுடைய சினேகாலயா சில்க்ஸ் இன் புதிய கடையை அங்கு தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தனது கடைக்கு தானே பிராண்ட் அம்பாசிடராக இருந்து விதவிதமாக போட்டோ சூட் எடுத்து வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஒரு சிறிய வதந்தியால் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும்…
இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…
நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…