1980களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை நளினி. நளினி ராமராஜன் தம்பதிக்கு அருணா என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நளினி நடித்து வருகிறார். கடந்த 1982-ஆம் ஆண்டு ஹிட்லர் உமாநாத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை சாதனா.
அதன்பிறகு மை டியர் லிசா, என்ன பெத்த ராசா, சினேகிதியே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சாதனா நடித்துள்ளார். தற்போது சாதனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மாறி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நெருங்கிய தோழியான நளினியும் சாதனாவும் ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது நளினி கூறியதாவது, எங்களது நட்புக்கு சாதனாவின் பார்ட்டிக்கு தான் நன்றி கூற வேண்டும்.
அவர் சாதனாவை யாரிடமும் பழக விடமாட்டார். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் நீங்கள் இருவரும் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார். எங்களுக்குள் 43 வருட நட்பு உள்ளது. அவள் எங்கு கூப்பிட்டாலும் நான் செல்வேன். நான் இங்கு கூப்பிட்டாலும் அவள் வருவாள் எனக் கூறியுள்ளார். சாதனா பேசும்போது, என்னை விட நளினி எனது மகளுக்கு நெருக்கம். என் மகளின் பிறந்த நாளும் நளினியின் பிறந்த நாளும் ஒரே நாள் என சாதனா கூறியுள்ளார்.
