டெல்லியில் தெரு நாய்கே கடியால் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா மகாதேவன் அமர்வு 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றி திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை விலங்குகள் நல ஆர்வலர்கள், நாய் பிரியர்கள் எதிர்த்து வருகிறார்கள். இதனையடுத்து சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி, சாயா வரலட்சுமி, அம்மு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.
அப்போது பேசிய வினோதினி ரேபிஸ் தோற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் எப்படி மனிதர்களில் ஒரு லட்சம் பேரில் ஒரு ரேப்பிஸ்ட் இருக்கிறானோ அதேபோல ஒரு லட்சம் நாய்களில் ஒரு நாய்க்கு ரேபிஸ் இருக்கலாம். அந்த நாய்களை மட்டும் பிடித்து அவற்றுக்கு சிகிச்சை கொடுக்கலாம். நாம் தெருக்களில் உணவு குப்பைகளை கொட்டுவதும் நாய்களின் பெருக்கத்திற்கு காரணம். தெருக்களை சுத்தமாக வைத்திருந்தாலே பிரச்சனை தீரும்” என்று கூறியுள்ளார்.
