ஆறு அறிவு படைத்த நமக்கே கோபம் வருது… அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வராதா..? கொந்தளித்த நடிகை அம்மு..!!

By Soundarya on ஆவணி 17, 2025

Spread the love

டெல்லியில் தெரு நாய்கே கடியால் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா மகாதேவன் அமர்வு 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றி திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை விலங்குகள் நல ஆர்வலர்கள், நாய் பிரியர்கள் எதிர்த்து வருகிறார்கள். இதனையடுத்து சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி, சாயா வரலட்சுமி, அம்மு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மு ராமச்சந்திரன், “வாயில்லா ஜீவன் என்று நாய்களை செல்வதற்கு காரணம் அவற்றால் பேசவோ தங்களுடைய தேவைகளை கூறவும் முடியாது என்பதற்காக தான். அதனால் கடிக்கவும், குரைக்கவும் தான் முடியும். உடம்பில் அவ்வளவு வலி மற்றும் பசியோடு அவை இருக்கின்றன. ஆறு அறிவு படைத்த நமக்கே பசி வந்தால்  கோபம் வருகிறது.  நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கின்றன. அப்படி ஏதாவது குழந்தையை கடித்து இருந்தால் அதற்கு வருந்துகிறோம்” என்று கூறியுள்ளார்.