#image_title
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான இவர் அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அழகு, திறமை என அனைத்தையும் பெற்ற நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வீரசிம்ஹா ரெட்டி, ஹனுமான் உள்ளிட்ட திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழில் நடிகையாக அறிமுகமான பிறகு பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிக்கலாம் என்று கணக்கு போட்டு இருந்த நிலையில் வெறும் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களின் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கில் சபரி என்ற திரைப்படத்திலும், தனுசுடன் ராயன் திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கின்றார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்தார். நிக்கோலய் சச்தேவ்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் இரண்டாவது தாரமாக மனைவியாகியிருக்கின்றார்.
அவரது குடும்பத்தினரும் ஓகே சொன்னதை தொடர்ந்து தாய்லாந்தில் இவர்களது திருமணம் கடந்த 2-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது, கடந்த ஜூலை மூன்றாம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் மிகப் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது வரலட்சுமி திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இரண்டு முறைப்படி இவர்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாத்தியும் இந்து முறைப்படி தாலி கட்டியும் திருமணம் செய்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…