தாஜ் ஹோட்டலில் மெஹந்தி.. தாய்லாந்தில் கல்யாணம்.. பாலிவுட் ஸ்டைலில் வரலட்சுமி திருமணம்.. முழு பிளான் இதுதான்..!

By Mahalakshmi on வைகாசி 28, 2024

Spread the love

நடிகர் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறி தற்போது நடிகராகவும் அரசியல்வாதியாகவும் கலக்கி வருகின்றார்.

   

இவரின் முதல் மனைவி சாயாவுக்கும் இவருக்கும் பிறந்த மகள்கள் தான் வரலட்சுமி மற்றும் பூஜா. இரண்டாவதாக தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்கின்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சரத்குமாரின் மூத்த மகளான நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

   

 

இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான நிக்கோலா சர்ச்தேவ் என்பவரை மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிக்கோலா ஏற்கனவே திருமணம் ஆனவர், இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள். இது தெரிந்தும் வரலட்சுமி சரத்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார். திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு காதலர் நிக்கோலா சர்ச்தேவ் உடன் டேட்டிங் செய்து வருகின்றார்.

இருவரும் சமீபத்தில் அவர்கள் வாழப் போகும் வீட்டை சுற்றி காட்டி இருந்தார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் பாலிவுட் ஸ்டைலில் மகளின் திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கின்றார். முதலில் திருமணத்தை ஜூலை இரண்டாம் தேதி நடத்த முடிவு செய்துள்ள நிலையில் மெகந்தி கொண்டாட்டம் திருமணத்திற்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

பின்னர் திருமணத்தை தாய்லாந்தில் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நிக்கோலா சர்ச்தேவ் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். திருமணத்தை முடித்துவிட்டு சென்னை லீலா பேலஸில் மிக பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.