நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்த நேர்காணலில் பேசிய அவர், தனது முதல் காதல் ரகசியத்தை இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்றும், தமக்கு யார் மீது முதல் காதல் வந்தது அல்லது தம்மை முதலில் காதலித்தது யார் என்ற உண்மையை வெளியே உடைத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே அதிரும் என்றும் ஒரு புதிய மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்டுள்ளார். இந்த ரகசியத்தை வெளியே சொல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகத் தமக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பதாகவும், அது தமக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வனிதாவின் இந்த அதிரடிப் பேட்டியைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அந்த மர்ம நபர் யாராக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் தீவிரமாகத் தேடத் தொடங்கியுள்ளனர். வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் முதன்முதலாகத் கதாநாயகியாக அறிமுகமான ‘சந்திரலேகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், இன்றைய தமிழக முதலமைச்சரான விஜய் ஆவார். வனிதா ஏற்கனவே ஒரு பழைய நேர்காணலில் நடிகர் விஜயைச் சின்ன வயதில் தன்னையோகாதலித்ததாகக் குறிப்பிட்டிருந்ததை நினைவு கூர்ந்துள்ள ரசிகர்கள், ஒருவேளை வனிதா தற்போது தமிழ்நாடே அதிரும் எனக் குறிப்பிட்ட அந்த முதல் காதல் நபர் முதலமைச்சர் விஜய் தானோ என்று பல்வேறு யூகங்களையும் கமெண்ட்டுகளையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
