தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார்.
தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் ஜூலை 21 ஆம் தேதி ‘அநீதி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது.
இவர் தற்பொழுது ‘அநீதி’ திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து ‘எனது சின்ன அரிசிப்பை பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது நடிகை வனிதா பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…
முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…