Connect with us

CINEMA

‘என்னுடைய சின்ன அரிசி பை பெருசா வளந்துருச்சு’…  மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை வனிதா… 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் ஜூலை 21 ஆம் தேதி  ‘அநீதி’ திரைப்படம் ரிலீசாக உள்ளது.

இவர் தற்பொழுது ‘அநீதி’ திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து ‘எனது சின்ன அரிசிப்பை பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது நடிகை வனிதா பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top