தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு நல்ல காமெடி நடிகர் சூரி. இவர் காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்பொழுது கலக்கி வருகிறார். இவர் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது களமிறங்கியுள்ளார்.
அவரது காமெடி காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தற்பொழுது இவர் ஹீரோவாக நடித்த ‘விடுதலை’ திரைப்படம் நிறைவு பெற்றுள்ளது’. இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை ஆனா பென் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து நடிகர் சூரி கூழாங்கல் படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நடிகர் சூரி ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருவதாகவும், தான் இத்திரைப்படத்தில் ஏற்று நடிக்கும் குமரேசன் கதாபாத்திரத்திற்காக ரெடியாகும் வீடியோவையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…